தில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

தில்லி தலைமைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

புது தில்லி: தில்லி தலைமைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தில்லி மாநில அரசின் ஆலோசனை கூட்டம் ஒன்று கடந்த  பிப்ரவரி மாதம் 19–ந்தேதி நள்ளிரவு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஒரு வாக்குவாதத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் மாநில அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக தில்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் தலைமைச் செயலாளர் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு , அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது திங்களன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com