வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் சிறிய மாற்றங்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் எதிர்காலத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சிறிய மாற்றங்களை தேர்தல் ஆணையம்
வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் சிறிய மாற்றங்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் எதிர்காலத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சிறிய மாற்றங்களை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கைரானா, பன்டாரா கோண்டியா உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகள், 10 சட்டப் பேரவை தொகுதிகள் ஆகியவற்றுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பழுதாகின. 
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில் உள்ள தொழில்நுட்பப் பிரிவு, அந்த பழுதுக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்தது.
அதில், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் இருக்கும் லேசர் சென்சார் கருவி மீது விளக்கு வெளிச்சம் நேரடியாக விழுவதால் வெப்பம் அதிகரித்து பழுது நேரிட்டதை கண்டுபிடித்தது. 
அதேபோல், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்துக்குள் இருந்து வாக்காளர் யார் வாக்களித்தார் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் துண்டுச்சீட்டு வெளியிட பயன்படுத்தப்படும் காகித உருளை ஈரப்பதம் அடைந்து, முறையாக செயல்படாததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த கோளாறுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கும் வகையில், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் சிறிய மாற்றங்களை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 
லேசர் சென்சார் கருவி மீது விளக்கு வெளிச்சம் நேரடியாக படாதவாறு அதன் மீது சிறிய மூடியை பொருத்தியுள்ளது. இதனால், விளக்கு வெளிச்சத்தின்கீழ் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை இனி வைத்தாலும், அது பழுதாகாது. 
மேலும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் தற்போது பயன்படுத்தப்படும் பேப்பர் உருளைக்கு பதிலாக ஈரப்பதம் அடையாத பேப்பர் உருளை வாங்கப்பட்டுள்ளது. 
இதன்மூலம், பேப்பர் உருளை கோளாறும் சரி செய்யப்பட்டு விட்டது என்றார் ஒ.பி. ராவத்.
தேர்தலின்போது வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கு குறிப்பிட்ட வேட்பாளருக்கு பதிவாகியுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. 
வாக்காளர் தனது வாக்கை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ததும், மின்னணு வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் இருந்து, அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் வகையில் துண்டுச்சீட்டு வெளியே விழும். 
இந்த துண்டுச்சீட்டு 7 விநாடிகள், அந்த இயந்திரத்தின் வெளிப்பகுதியில் இருக்கும். 
பின்னர் உள்ளே இருக்கும் பெட்டிக்குள் விழுந்து விடும். அதை வாக்காளர் தங்களது கையில் வெளியே எடுத்து வர முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com