பாலியல் சித்ரவதைக் கூடங்களாக மாறிய பிகார் சிறுமிகள் விடுதிகள்: அதிர வைத்த ஆய்வறிக்கை 

பிகாரில் செயல்படும் 15 சிறுமிகள் விடுதிகள் பாலியல் சித்ரவதைக் கூடங்களாக செயல்பட்டுள்ள அதிர வைக்கும் தகவல் டாடா நிறுவன ஆய்வறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாலியல் சித்ரவதைக் கூடங்களாக மாறிய பிகார் சிறுமிகள் விடுதிகள்: அதிர வைத்த ஆய்வறிக்கை 

பாட்னா: பிகாரில் செயல்படும் 15 சிறுமிகள் விடுதிகள் பாலியல் சித்ரவதைக் கூடங்களாக செயல்பட்டுள்ள அதிர வைக்கும் தகவல் டாடா நிறுவன ஆய்வறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பிகாரில் உள்ள அரசு உதவி பெறும் சிறுமிகள் காப்பங்களில் சமூகத் தணிக்கை மேற்கொண்டது. அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. 

இதைத் தொடர்ந்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். அத்துடன் அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாதக் கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அந்த குறிப்பிட்ட விடுதியில் பணிபுரிபவர்களாலும், அங்கு வருகை தந்தவர்களாலும்தான் சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களில் சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகி,  கருக்கலைப்பு செய்யப்பட்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான, குறிப்பிட்ட விடுதியினை நிர்வகித்து வந்த தன்னார்வ அமைப்பின் நிர்வாகியான பிரஜேஷ் குமார் தாக்கூரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஒரு விடுதியில் மட்டுமல்லாமல், மாநிலத்தில் உள்ள மேலும் 14  சிறுமிகள் விடுதிகளில் இத்தகைய பாலியல் வன்முறைகள் நடைபெற்று உள்ளதாக, டாட்டா சமூக அறிவியல் நிறுவன தணிக்கை  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கடும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.    .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com