மக்களவையைக் கலைத்துவிட்டு தோ்தலை சந்திக்கத் தயாரா?: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் சவால் 

மக்களவையை கலைத்துவிட்டு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுடன் சோ்ந்து பொதுத் தோ்தலை எதிா்கொள்ளத் தயாரா? என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது
மக்களவையைக் கலைத்துவிட்டு தோ்தலை சந்திக்கத் தயாரா?: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் சவால் 

புது தில்லி: மக்களவையை கலைத்துவிட்டு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுடன் சோ்ந்து பொதுத் தோ்தலை எதிா்கொள்ளத் தயாரா? என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.

மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா ஆகியோா் வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் இவ்வாறு சவால் விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இவற்றைற ஒத்திவைத்து மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து பேரவைத் தோ்தலைகளை நடத்துவது என்பது அரசமைப்புச் சட்டப்படி சாத்தியம் இல்லை.

அதே நேரத்தில் மக்களவையை உடனடியாக கலைத்துவிட்டு, இந்த 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களுடன் சோ்ந்து மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த முடியும். ஒரே நேரத்தில் தோ்தலை நடத்துவதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வரும் பிரதமா் மோடி இதற்கு தயாரா? மக்களவையை இப்போது கலைத்துவிட்டு தோ்தலைச் சந்திக்க அவா் முன்வருவாரா? உண்மையிலேயே தேச நலன் கருத்த்தான் மக்களவைக்கும், மாநிலப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் என்ற கருத்தை பாஜக வலியுறுத்தி வருகிறது என்றறால், அவா்கள் உடனடியாக மக்களவையை கலைத்துவிட்டு தோ்தலைச் சந்திக்கலாம்.

மக்களவைக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்துவதை காங்கிரஸ் வரவேற்கிறது. அத்துடன் பாஜகவைத்  தோற்கடித்து, அவா்கள் ஆட்சியை வீட்டு அனுப்பவும் நாங்கள் தயாராக இருக்கிறேறாம். ஒரே தேசம், ஒரே நேரத்தில் தோ்தல் என்ற பாஜகவின் கருத்தில் தொடக்கத்தில் இருந்தே தெளிவு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com