பாரதியின் கனவு மெய்ப்படும்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பு அம்சங்கள்!

72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புதன்கிழமை உரையாற்றினார். 
பாரதியின் கனவு மெய்ப்படும்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பு அம்சங்கள்!

72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புதன்கிழமை உரையாற்றினார். 

இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி முதலில் தெரிவித்தார். அதன்பிறகு அவர் ஆற்றிய நீண்ட உரையில் தெரிவித்த சில அம்சங்கள்.    

  • இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு தலைவணங்குகிறேன்
  • இந்தியா புதிய வளர்ச்சிகளை நோக்கி முன்னேறி பயணித்துக் கொண்டிருக்கிறது 
  • வலிமை மிக்க நாடுகளில் உலகின் 6-வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது 
  • இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அம்பேத்கர் வகுத்த சட்டம் தான் வழிகாட்டுகிறது
  • நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது
  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு இந்த கூட்டத்தொடரில் அரசமைப்பு அந்தஸ்து வழங்கி மசோதா தாக்கல் செய்யப்பட்டது 
  • இதன்மூலம், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன 
  • அனைத்து மட்டத்தில் இருப்பவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க முயற்சி செய்து வருகிறோம்
  • 2014-க்கு பிறகு நாடு வளர்ச்சியடைந்துள்ளது. இந்த முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது
  • தூய்மை இந்தியா, இலவத கேஸ் இணைப்பு உள்ளிட்ட ஏழை மக்களுக்கான திட்டங்கள் வெற்றி கண்டுள்ளன
  • தூய்மை இந்தியா திட்டம் மூலம் 3 லட்சம் குழந்தைகள் காப்பற்றப்பட்டுள்ளனர். ஆனால், இந்த திட்டம் கொண்டுவரப்பட்ட போது ஏளனம் செய்யப்பட்டது
  • கிராமப்புறங்களில் ஏராளமான வீடுகளை கட்டியுள்ளோம்
  • ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் வாக்குறுதியாக இல்லாது செயல்படுத்தப்பட்டது 
  • பருவமழையால் இந்தியாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினர் அதன் மீட்புப் பணியிலும் சிறப்பாக செயல்படுகின்றனர்
  • இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுடன் உதவியாக இருக்க வேண்டும்
  • விவசாயத் துறையிலும் இளைஞர்கள் ஈடுபட்டு சாதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
  • பெண்களை காப்பதற்கு அரசு உறுதி எடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர்
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது 
  • ககன்யான் திட்டம் மூலம் செயற்கைகோளில் இந்தியர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை 2022-க்குள் நிறைவேற்றி செயல்படுத்தப்படும்
  • 50 கோடி மக்களுக்கு உதவும் வகையில் "ஆயுஷ்மன் பாரத்" அமையவுள்ளது
  • REFORM, PERFORM, TRANSFORM இதுதான் மத்திய அரசின் தாரக மந்திரம்
  • கிராமங்களையும் சென்றடைவதே வளர்ச்சி

பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி,

‘எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என கூறியுள்ளார் பாரதியார்’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com