எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு: வாஜ்பாய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக  தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. 
எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு: வாஜ்பாய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு இந்தியாவை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு சகாப்தத்தின் நிறைவாகும். அவர் தேசத்துக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். அவருடைய குடும்பத்தினர், பாஜக-வினருக்கு இது மிகவும் சோகமான நிகழ்வாகும்.

அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். அவருடனான நிறைய நினைவுகள் உள்ளன. என்னைப் போன்ற ஒவ்வொரு பாஜக-வினருக்கும் அவர் தலைசிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார். அவரின் கூர்மையான சிந்தனையும், நகைச்சுவை உணர்வையும் என்றும் என் நினைவில் இருக்கும். வாஜ்பாய்-இன் வலிமையான தலைமையின் கீழ் சக்திவாய்ந்த 21-ஆம் நூற்றாண்டு உருவாக காரணமாக இருந்தது.

அவருடைய  கொள்கைகள் பலதரப்பட்ட மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய் அவர்களின் கடுமையானப் போராட்டங்களால் தான் பாஜக ஒவ்வொரு படியாக வளர்ந்தது. இந்த நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பாஜக-வின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அதனால் தான் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவானது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com