கட்சி வேண்டுமானால் என்னுடன் இருக்கலாம்; ஆனால் மக்கள் வாஜ்பாய் பக்கம்தான்: உருகிய உயிர் நண்பர் 

கட்சி வேண்டுமானால் என்னுடன் இருக்கலாம்; ஆனால் மக்கள் வாஜ்பாய் பக்கம்தான் இருக்கின்றனர் என்று அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கட்சி வேண்டுமானால் என்னுடன் இருக்கலாம்; ஆனால் மக்கள் வாஜ்பாய் பக்கம்தான்: உருகிய உயிர் நண்பர் 

புது தில்லி: கட்சி வேண்டுமானால் என்னுடன் இருக்கலாம்; ஆனால் மக்கள் வாஜ்பாய் பக்கம்தான் இருக்கின்றனர் என்று அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2005 டிசம்பா் 29-இல் மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை வாஜ்பாய் அறிவித்தாா். அப்போது, ‘இனி நான் தோ்தலில் போட்டியிடப் போவது இல்லை. இதுவரை நான் செய்து வந்த பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள கட்சியில் பல மூத்த தலைவா்கள் உருவாகியுள்ளனா். அவா்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வாா்கள்’ என்றாா்.

மேலும் இனி பாஜகவின் ராமா் - லட்சுமணாக எல்.கே. அத்வானி, பிரமோத் மகாஜன் (மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவாரான இவர் பின்னாளில் தனது சொந்த சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்) ஆகியோா் செயல்படுவாா்கள் என்று வாஜ்பாய் அறிவித்தாா்.

அவருக்குப் பின்னர் பாஜக தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டவர் அத்வானி. ஆனால் வாஜ்பாய்க்கு இருந்த மக்கள் செல்வாக்கு தனக்கு இல்லை என்பதை அத்வானி ஒருமுறை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டாா். ‘கட்சி வேண்டுமானால் என்னுடன் இருக்கலாம். ஆனால் மக்கள் வாஜ்பாய் பக்கம்தான் உள்ளனா்’ என்று அத்வானியே  ஒருமுறை குறிப்பிட்டாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com