செங்கோட்டை பாதுகாப்பில் முதல்முறையாக பெண் கமாண்டோக்கள்

சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டைக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பணிகளில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 
தில்லி செங்கோட்டையில் முதல்முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஸ்வாட்' படைப்பிரிவில் இடம்பெற்ற பெண் கமாண்டோ.
தில்லி செங்கோட்டையில் முதல்முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஸ்வாட்' படைப்பிரிவில் இடம்பெற்ற பெண் கமாண்டோ.


சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டைக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பணிகளில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 
ஸ்வாட்' என்று சொல்லக் கூடிய சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரக் குழு இந்தப் பணியில் பங்கெடுத்தது. முழுவதும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அந்தக் குழுவில் 36 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். முன்னதாக, இவர்களுக்கு பயங்கரவாத எதிர்ப்பு பணி குறித்து தேசிய பாதுகாப்பு அதிரடிப்படை (என்எஸ்ஜி) சார்பில் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.
ஸ்வாட் குழுவில் இடம்பெற்றிருந்த சுமதா ரப்தா கூறுகையில், நாட்டின் மிக முக்கியமான விழாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் வாய்ப்பு கிடைத்த இந்த நாளை எனது வாழ்க்கையில் எப்போதும் நான் நினைவில் வைத்திருப்பேன்'' என்றார்.
தீப்தி பர்மன் என்பவர் தனது பணி அனுபவம் குறித்து குறிப்பிடுகையில், பிரதமர் நரேந்திர மோடி எங்களது குழுவினரை குறிப்பிட்டு பேசியது பெருமையாக உள்ளது. நானும், எங்கள் குழுவினரினரும் எங்களுக்கான பொறுப்புகளை உணர்ந்து, எங்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு பணியையும் முழுமுயற்சியுடன் செய்து முடிப்போம்.
வடகிழக்கு மாநிலத்தவர்கள் மற்றும் அவர்களது திறன் குறித்த கண்ணோட்டத்தை மக்கள் இனி மாற்றிக் கொள்வர் என நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.
ஸ்வாட் குழுவில் பொதுவாக ஆண்கள் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால், அதை முதன்முதலில் தகர்த்தெறிந்து இந்த 36 பெண் கமாண்டோக்களும் கடந்த 10-ஆம் தேதி அந்தக் குழுவில் இணைந்தனர்.
ஏகே-47 ரக துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் இரவு நேரத்தில் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கிகளை கையாளும் அளவுக்கு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் நிறைந்த சந்தைகள், நெரிசலான குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடும் அளவுக்கு இப்பெண்கள் திறன் பெற்றவர்களாவர்.
தமது சுதந்திர உரையில் ஸ்வாட் பெண்கள் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், வடகிழக்கு மாநிலங்களுக்கும், தில்லிக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு பணியாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com