தெற்காசியாவுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது இந்தியா: அமெரிக்கா பாராட்டு

ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் தெற்காசியாவுக்கும், ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியா எடுத்துக்காட்டாக திகழுகிறது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
தெற்காசியாவுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது இந்தியா: அமெரிக்கா பாராட்டு


ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் தெற்காசியாவுக்கும், ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியா எடுத்துக்காட்டாக திகழுகிறது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய சுதந்திரன தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் போம்பியா புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய சுதந்திர தினத்தில் நாங்கள் அந்நாட்டை பாராட்டுகிறோம். ஜனநாயகத்தில் ஒருங்கிணைந்த நாகரீகத்தை கடைப்பிடிக்கும் நாடாகவும், நண்பனாகவும் உள்ளது இந்தியா. சர்வதேச அளவில் வழிகாட்டும் சக்தியாக திகழுவதில் இந்தியா தமக்கான இடத்தை தக்க வைத்துள்ளது. மேலும், விதிமுறைகளை செயல்படுத்தும் நமது முயற்சிகளுக்கு பக்கபலமாகவும் உள்ளது.
ஜனநாயகத்தை ஆதரிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது போன்ற விவகாரங்களில் தெற்காசியாவிற்கும், உலகிற்கும் இந்தியா சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய, பழமைவாய்ந்த ஜனநாயகத்தின் அங்கம் என்ற வகையில், இரு நாட்டு மக்களும் மிக நெருங்கிய நட்புறவுடன் உள்ளனர். அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், அறியவியல், உயர் தொழில்நுட்பம் போன்றவற்றில் இரு நாடுகளும் அளிக்கும் பங்களிப்பானது எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளையும், வளங்களையும் உருவாக்குவதாக அமையும் என்று போம்பியா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com