மக்களவை, 4 மாநில சட்டப் பேரவைகளுக்கு டிசம்பரில் தேர்தல் நடத்தத் தயார்: தலைமை தேர்தல் ஆணையர்

ஒரே நேரத்தில் மக்களவைக்கும், 4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்த தயார் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத் தெரிவித்தார்.
மக்களவை, 4 மாநில சட்டப் பேரவைகளுக்கு டிசம்பரில் தேர்தல் நடத்தத் தயார்: தலைமை தேர்தல் ஆணையர்


ஒரே நேரத்தில் மக்களவைக்கும், 4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்த தயார் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத் தெரிவித்தார்.
மக்களவைக்கும், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தற்போது தேர்தல் நடத்த இயலாது என்று தலைமை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத்திடம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிúஸாரம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைகளுக்கு டிசம்பர் மாதத்தில் தேர்தல் வர இருப்பதை சுட்டிக்காட்டி, இந்தத் தேர்தலுடன் சேர்த்து, மக்களவைக்கு தேர்தல் நடத்த தயாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ராவத் அளித்த பதில் வருமாறு:
ஏன் முடியாது? அதில் எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை. 4 மாநில சட்டப் பேரவைகளுடன் சேர்த்து, மக்களவைக்கு தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில், அதற்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செப்டம்பர் மாத இறுதியிலும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் நவம்பர் மாத இறுதியிலும் தயாராகி விடும்.
தேர்தலுக்கு தேவைப்படும் 17.15 லட்சம் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில், 16 லட்சம் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் நவம்பர் மாதத்துக்கு முன்னதாகவே தயாராகி விடும். எஞ்சிய 1.5 லட்சம் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள், நவம்பர் மாத இறுதியில் தயாராகும். டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில், மேற்கண்ட 1.5 லட்சம் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் முதல்கட்ட சரிபார்ப்பு பணியை மேற்கொள்வது கடினமாகும்.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் 10 லட்சம் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு தேவைப்படுகின்றன. இதேபோல், 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் 2 லட்சம் வாக்குச் சாவடிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும் தேவைப்படுகின்றன.
வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பழுதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் குழு படிப்படியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதனால் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள், தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்படுவதில் தாமதம் நிலவுகிறது. 
இருப்பினும், 13.95 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 9.3 லட்சம் கட்டுப்பாட்டு கருவிகளும் செப்டம்பர் மாத இறுதியிலும், 17.15 லட்சம் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் நவம்பர் மாதத்திலும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டு விடும் என்றார் ஒ.பி. ராவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com