2.8 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்ட ரயில் ஈரோட்டில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டது - ரயில்வே நிர்வாகம் உதவிக்கரம்

கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஈரோட்டில் இருந்து 2.8 லட்சம் லிட்டர் குடிநீர் கேரள அரசுக்கு வழங்க ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
புகைப்படம்: ஏஎன்ஐ
புகைப்படம்: ஏஎன்ஐ

கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஈரோட்டில் இருந்து 2.8 லட்சம் லிட்டர் குடிநீர் கேரள அரசுக்கு வழங்க ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. 

கேரள மாநிலம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை கண்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  மாநிலத்தில் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தார்.

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது. முதலில் வெள்ளத்தின் அளவு அதிகரித்ததால் குறிப்பிட்ட இடங்களில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் குடிநீர் விநியோகமும் நிறுத்தப்படவுள்ளது என்று கேரள குடிநீர் ஆணையம் தெரிவித்தது. இதனால், குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டம் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை 2.8 லட்சம் லிட்டர் குடிநீர் ரயில் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2.8 லிட்டர் அளவு குடிநீர் கொண்ட சின்டெக்ஸ் டேங்குகள் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கேரளாவுக்கு புறப்பட்டுள்ளது. 

எர்ணாகுளம் - ஷோரணூர் - பாலக்காடு வழித்தடத்தின் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இந்த பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், இந்த ரயில் நெல்லை, திருவனந்தபுரம், ஆலப்புழை வழியாக கேரள அரசுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. 

இந்த ஏற்பாடு ரயில்வே நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com