கேரளாவில் நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப நிர்மலா சீதாராமன் உத்தரவு

கேரளாவில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் மழையால் 14 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. கனமழை, நிலச்சரிவால் இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழையையடுத்து கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். மேலும் கேரளாவில் வெள்ளபாதிப்புகள் அதிகமாக இருப்பதால் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப அவர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com