நிர்வாகம் என்பது நீதிமன்றங்களுக்கானது அல்ல

நிர்வாகம் என்பது அரசு சார்ந்த விவகாரமே தவிர, நீதிமன்றங்கள் சார்ந்தது அல்ல' என தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.
நிர்வாகம் என்பது நீதிமன்றங்களுக்கானது அல்ல


நிர்வாகம் என்பது அரசு சார்ந்த விவகாரமே தவிர, நீதிமன்றங்கள் சார்ந்தது அல்ல' என தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.
நிர்வாகம் என்பது, தங்களை நிர்வகிக்க இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமே இருக்க வேண்டும் என்று சட்டத்தை நிறுவியவர்கள் விரும்புகின்றனர்' என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை கூறியிருந்தார். இச்சூழலில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வீடில்லாமல் தவிப்போருக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது இவ்வாறு கூறிய நீதிபதிகள் மதன் பி.லோக்குர், எஸ். அப்துல் நஸீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தங்களால் கட்டாய உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது என்று கூறியது.
தீனதயாள் அந்த்யோதயா-தேசிய நகர்ப்புற வாழ்வுத் திட்டம் அமல்படுத்தப்படுவதைக் கையாள வேண்டிய குழுக்களை சில மாநிலங்கள் அமைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. அவ்வாறு குழுவை அமைக்காத மாநில அரசுகளுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அமர்வு, எங்களது அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிர்வாகம் என்பது அரசு சார்ந்த விவகாரமே தவிர, நீதிமன்றங்கள் சார்ந்தது அல்ல என்று எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசுகள் நிர்வாகத்தில் தவறும்பட்சத்தில், எங்களால் ஏதும் செய்ய இயலாது' என்று கூறியது.
தொடர்ந்து, தீனதயாள் அந்த்யோதயா திட்டத்துக்கான குழுக்களை அமைக்கும் விவகாரத்தில் ஒவ்வொரு மாநில அரசின் நிலைகள் குறித்த அட்டவணையை 10 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com