பாஜகவின் தலைமையகத்துக்கு முதல் முறையாக வருகிறார் வாஜ்பாய்: உயிரற்ற உடலாக!

பாஜகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 93.
பாஜகவின் தலைமையகத்துக்கு முதல் முறையாக வருகிறார் வாஜ்பாய்: உயிரற்ற உடலாக!


புது தில்லி: பாஜகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 93.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய், சிகிச்சை பலனிளிக்காமல் நேற்று மாலை 5.05 மணிக்கு உயிரிழந்தார். 

வாஜ்பாய் உடல் தில்லியில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முக்கியத் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கட்சி அலுவலகத்திலேயேக் கழித்த வாஜ்பாயியின் உடலை பாஜகவின் தலைமைக் கழகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது உடல் இன்று பகல் 11 மணியளவில் பாஜக தலைமையகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு ஏராளமான தொண்டர்கள் வாஜ்பாயியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தொண்டர்கள் மட்டுமல்லாமல், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்தத் தலைவர்கள் பலரும் பாஜக தலைமையகத்தில் குவிந்துள்ளனர். 

புது தில்லியில் இருக்கும் பாஜக கட்சியின் அலுவலகத்தையே தனது உயிராகக் கருதி வாழ்ந்த வாஜ்பாய் இன்று உயிரற்ற உடலாய் கொண்டு வரப்பட்டுள்ளதை நினைத்து தொண்டர்கள் கண் கலங்குகின்றனர்.

பாஜகவின் பழைய கட்சி அலுவலகம் புது தில்லியில்  அசோகா சாலையில் இயங்கி வந்தது. தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டு ஒரு வருடங்கள் ஆகின்றன. கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் உடல் நிலைக் காரணமாக வாஜ்பாயியால் கலந்து கொள்ள முடியவில்லை.

அந்த புதிய கட்சி அலுவலகத்துக்கு தற்போது வாஜ்பாயியின் உடல் எடுத்து வரப்படுகிறது. தான் உயிராய் நினைத்த கட்சியின் அலுவலகத்துக்கு முதல் முறையாக வருகிறார் உயிரற்ற உடலாய்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com