கேரளத்துக்கு ரயில்கள் மூலம் குடிநீர்: தெற்கு ரயில்வே ஏற்பாடு

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீரை தெற்கு ரயில்வே அனுப்பி வருகிறது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு  ரயில் மூலம் அனுப்பப்படும் குடிநீர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு  ரயில் மூலம் அனுப்பப்படும் குடிநீர்.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீரை தெற்கு ரயில்வே அனுப்பி வருகிறது.
கேரள மாநிலத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் 300 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம், கேரள மாநிலத்துக்கு ரயில்கள் மூலம் குடிநீர் அனுப்பத் தொடங்கியுள்ளது. சின்டெக்ஸ்  தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு,அவை ரயில் வேகன்களில் அனுப்பப்படுகின்றன.
முதல் ரயில் ஈரோடு சந்திப்பில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டு திருவனந்தபுரத்தை சென்றடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் இருந்து மற்றொரு ரயில் புறப்பட்டு சென்றது. இவற்றின் மூலம் தற்போது தலா 2.8 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இவை தவிர, நீர் நிரப்பாத சின்டெக்ஸ் தொட்டிகளுடன் 15 வேகன்கள் அடங்கிய ரயில், சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து ஈரோடு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஈரோட்டில் காலி சின்டெக்ஸ் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு அந்த ரயில் கேரள மாநிலத்துக்கு செல்லவுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது:
ஒவ்வொரு வேகனிலும் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பிடிக்கும் வகையில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டு தலா 7 வேகன்கள் கொண்ட இரு ரயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர 15 வேகன்கள் கொண்ட ரயிலும் தண்ணீர் எடுத்துச் செல்லவுள்ளது. 
மேலும் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்களும் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து தேவைக்கேற்ப குடிநீர் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com