தண்ணீரில் மிதக்கும் கேரளாவுக்கு குடிநீர் அனுப்பும் தென்னக ரயில்வே

வெள்ளக்காடாக மாறிய கேரள மாநிலத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக் கரங்கள் குவிந்து வருகிறது.
தண்ணீரில் மிதக்கும் கேரளாவுக்கு குடிநீர் அனுப்பும் தென்னக ரயில்வே


வெள்ளக்காடாக மாறிய கேரள மாநிலத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக் கரங்கள் குவிந்து வருகிறது.

உணவு, குடிநீர், மருந்து என தேவை அதிகமாக இருப்பதால், தன்னார்வலர்களும், தனியார் அமைப்புகளும் அனுப்பும் சிறிய அளவிலான நிவாரணங்கள் போதவில்லை. இனியும் தாமதிக்காமல் மாநில அரசுகளும் பொதுத் துறை நிறுவனங்களும் நிவாரணப் பணியில் இணைய வேண்டிய தருணம் இதுவாக மாறியுள்ளது.

இதற்கு முன்னுதாரணமாக இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ கேரள வெள்ளத்துக்கு ரூ.2 கோடியை நிதியுதவியாக அறிவித்துள்ளது.
 

உதவுவதில் தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று கேரள மாநிலத்துக்கு குடிநீர் அனுப்ப முன் வந்துள்ளது தென்னக ரயில்வே.

தென்னக ரயில்வே சார்பில், ஈரோட்டில் இருந்து சரக்கு ரயில் மூலமாக 38 டேங்கர்களில் குடிநீர், கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

கேரள மக்களுக்கு உதவிடும் நோக்கில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் 7 சரக்கு ரயில்களில் 38 குடிநீர் டேங்கர்கள் ஈரோடு ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பா ராவ் தலைமையில், குடிநீர் டேங்கர்களில்  சுத்திகரிக்கப்பட்ட 2.80 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், பாலக்காட்டில் இருந்து ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல மேலும் 15 ரயில்கள் மூலம் கேரள மாநிலத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com