வெள்ளம் புரட்டிப்போட்ட கடவுளின் தேசம்: மழை, வெள்ளம் நிலவரம் - உடனுக்குடன் தகவல்கள்

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். சுமார் 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்
வெள்ளம் புரட்டிப்போட்ட கடவுளின் தேசம்: மழை, வெள்ளம் நிலவரம் - உடனுக்குடன் தகவல்கள்


கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். சுமார் 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கேரள மக்களுக்கு உதவ தமிழகத்தின் பலப் பகுதிகளில் இருந்தும் உதவிக் கரங்கள் நீண்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள், மாநகராட்சிகள் என பல வகையில் நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டு கேரள மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இன்று ஒரே நாளில் கேரளாவில் மழை, வெள்ள சம்பவங்களில் சிக்கி 9 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ள நிலைமைகளை ஆய்வு செய்ய கேரளா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு முதல்வர் பினராயி விஜயனுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியுதவியாக முதற்கட்டமாக ரூ.500 கோடியை மத்திய அரசு அளிக்கும் என்று மோடி அறிவித்துள்ளார்.
 

மோசமான வானிலை காரணமாக, வெள்ள நிலைமைகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட இருந்தது ரத்து செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தில் காசர்கோட் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளைத் தவிர மற்ற அனைத்தும் ரெட்  அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்று நீர் வெள்ளமாக மாறி சுமார் 7 கி.மீ. தூரம் வரை பரவியுள்ளது.

கொச்சி விமான நிலையத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு உதவ ஒடிசாவில் இருந்து தீயணைப்புத் துறை விரைந்தது.

75 மோட்டார் படகுகளுடன், 240 பேர் கொண்ட தீயணைப்புப் படையினர் விமானப் படை விமானம் மூலம் கேரளாவுக்கு ஒடிசா அரசு அனுப்பி வைத்துள்ளது.

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க ராகுல் கோரிக்கை
கேரள மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

செங்கன்னூர் : இல்லிக்கல் பாலம் பகுதியில் இருந்து 3 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குமுளியில் இருந்து இடுக்கி செல்லும்  மாநில நெடுஞ்சாலை நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணி கொட்டும் மழையிலும் நடைபெற்று வருகிறது.

கொச்சியில் கடுமையான வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு இந்திய விமானப் படை வீரர்கள் உணவு பொருட்களை பத்திரமாகக் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அதன் விடியோ இதோ.

கேரளாவுக்கு உதவத் தயாராகும் ஐக்கிய அரபு நாடுகள்
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியச் சகோதரர்களுக்கு உதவுமாறு ஐக்கிய அரபு நாடுகளின் துணை அதிபர் மொஹம்மது பின் ரஷீத் அல் மக்டௌம் தன் நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலக்காடு பகுதியில் மங்கலம் அணைக் கிராமத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் ஆர்ஏஎஃப் படை வீரர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com