கேரள வெள்ள பாதிப்பு: மேற்கு வங்கம் சார்பில் முதல்வர் மம்தா ரூ.10 கோடி நிதியுதவி 

கேரளாவில் நிகழ்ந்துள்ள வரலாறு காண வெள்ள சேதத்திற்கு மேற்கு வங்கம் சார்பில் முதல்வர் மம்தா ரூ.10 கோடி நிதியுதவியினை, கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு என அறிவித்துள்ளார்.
கேரள வெள்ள பாதிப்பு: மேற்கு வங்கம் சார்பில் முதல்வர் மம்தா ரூ.10 கோடி நிதியுதவி 

கொல்கத்தா: கேரளாவில் நிகழ்ந்துள்ள வரலாறு காண வெள்ள சேதத்திற்கு மேற்கு வங்கம் சார்பில் முதல்வர் மம்தா ரூ.10 கோடி நிதியுதவியினை, கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு என அறிவித்துள்ளார்.

"கடவுளின் தேசம்"  என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு  வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடியளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார்  2 லட்சத்து 25 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டி விட்டது.  இதைத்தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் , அமைப்புகளும் மற்றும் தனி நபர்களும் கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்கம் சார்பில் அம்மாநில முதல்வர் மம்தா ரூ.10 கோடி நிதியுதவியினை, கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுடன் தனது உள்ளம் துணை  நிற்பதாகத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com