ஒரு கிலோ இனிப்புகளின் விலை ரூ 9000: எங்கு? ஏன் தெரியுமா?   

குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ஒரு கிலோ இனிப்பு ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் தெரிய வந்துள்ளது.
ஒரு கிலோ இனிப்புகளின் விலை ரூ 9000: எங்கு? ஏன் தெரியுமா?   

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ஒரு கிலோ இனிப்பு ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் '24 காரட் மித்தாய் மேஜிக்' என்னும் இனிப்புக் கடை ஒன்று உள்ளது. விரைவில் வர இருக்கும் 'ரக்ஷா பந்தன்' விழாவினை முன்னிட்டு  இந்தக் கடையில் புதிய  வகை இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு குறிப்பிட்ட வகை இனிப்புகள் மட்டும் கிலோ ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்குக் காரணம் என்னவென்றால் குறிப்பிட்ட வகை இனிப்புகள் மீது சுத்தமான தங்கம் இழைகளாக பூசப்பட்டுள்ளதுதான்.

இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் பிரின்ஸ் மித்தாய்வாலா கூறியதாவது:

இந்த வகை இனிப்புகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் வெள்ளி இழைகளுக்கு பதிலாக, தூய தங்க இழைகள் பயன்படுத்தப்படுகின்றது. அதனுடைய ஆரோக்கிய பயன்பாடுகளின் பொருட்டே தங்கம் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் ரக்ஷா பந்தன் வரவுள்ளதால் ஒரு சிலர் இதனை வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'தங்க இனிப்புகள்' என்று அழைக்கப்படும் இவைதான் தற்பொழுதுக்கு அங்கு பேசுபொருள் ஆகியிருக்கின்றன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com