80 இடங்களுக்கு 8000 பேர் விண்ணப்பம்: தேர்வெழுதிய அத்தனை பேரும் தோல்வியடைந்த விநோதம் 

80 இடங்களுக்கு 8000 பேர் விண்ணப்பம்: தேர்வெழுதிய அத்தனை பேரும் தோல்வியடைந்த விநோதம் 

கோவாவில் அரசுப் பணிக்கு விண்ணப்பித்து தேர்வெழுதிய 8000 பேரும் தோல்வியடைந்த விநோதம் நிகழ்ந்துள்ளது. 

பனாஜி: கோவாவில் அரசுப் பணிக்கு விண்ணப்பித்து தேர்வெழுதிய 8000 பேரும் தோல்வியடைந்த விநோதம் நிகழ்ந்துள்ளது. 

கோவா கணக்கியல் துறையில் அரசு கணக்காளர் பணிக்கு 80 இடங்கள் காலியாக இருந்தன. எனவே இதனை  நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 80 பணியிடங்களுக்கு மொத்தம் 8000 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 7-ந்தேதி முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வர். 

தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணக்கியல் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன.  மொத்தம் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தது 50 சதவீதம் அளவிற்கு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறிப்பிட்ட தேர்வு முடிவுகள் செவ்வாயன்று கோவா கணக்கியல் துறை இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்டன.  இதில் தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com