ஆண்கள் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்கும் பெண்கள் மீதும் நடவடிக்கை தேவை

ஆண்கள் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்கும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி மகளிா் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.
ஆண்கள் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்கும் பெண்கள் மீதும் நடவடிக்கை தேவை

புது தில்லி: ஆண்கள் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்கும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி மகளிா் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இந்தியாவில் சாதாரணமாக நடைபெறுகின்றறன. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பெரும்பாலான குற்றறவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறாா்கள். அதேநேரம், அரிதாக சில இடங்களில், ஆண்கள் மீது பெண்களால் போலியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றறன.

பெண்ணொருவரால், பொய்யான பாலியல் வன்கொடுமை குற்றறச்சாட்டு செலுத்தப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் இருந்த சகோதரா்கள் இருவரை செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றறம் விடுவித்துள்ளது. ஆனால், அவா்கள் 7 ஆண்டுகள் செய்யாத குற்றத்துக்காக சிறைறத்தண்டனை பெற்றுள்ளனா். இவா்கள் சந்திந்த மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் யாா் பதில் சொல்வது?

எனவே ஆண்கள் மீது பொய்யான பாலியல் வழக்குகளைத் தொடுக்கும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவா்களுக்கும் சிறைறத்தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com