லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் ரத்து: ஆகஸ்ட் 30-ல் சரணடைய உத்தரவு 

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் ரத்து செய்யபட்டு, ஆகஸ்ட் 30-ல் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் ரத்து: ஆகஸ்ட் 30-ல் சரணடைய உத்தரவு 

ராஞ்சி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் ரத்து செய்யபட்டு, ஆகஸ்ட் 30-ல் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பல கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடைத் தீவன ஊழல் தொடர்புடைய 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். 1990-களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான அரசு பிகாரில் ஆட்சியில் இருந்தபோது இந்த ஊழல்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்த வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக லாலு பிரசாத் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பேரில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி லாலு பிரசாத்துக்கு முதன் முறையாக 6 வாரங்கள் ஜாமீன் வழங்கியது.

பின்னர் அது ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது லாலு பிரசாத்துக்கான ஜாமீன் 20-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையின்போது ஜாமீன் காலம் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் ரத்து செய்யபட்டு, ஆகஸ்ட் 30-ல் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

ஜாமீன் நீட்டிப்புக் கோரி லாலு தரப்பில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.  லாலுவுக்காக மூத்த வழக்கறிஞர்  அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார். ,லாலு தற்பொழுது மீண்டும் உடல்நலக் குறைவால் மும்பை ஏசியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், எனவே அதன் காரணமாக சிகிச்சையைத் தொடர்வதற்காக லாலுவின் ஜாமீனை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை வைத்தார்.

ஆனால் இதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேவைப்பட்டால் லாலுவுக்கு ராஞ்சியில் உள்ள 'ரிம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை ரத்து செய்ததோடு,  அவரை ஆகஸ்ட் 30-ல் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com