கேரள வெள்ள பாதிப்பு: நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில  அரசின் 'அடடே' ஐடியா 

கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.
கேரள வெள்ள பாதிப்பு: நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில  அரசின் 'அடடே' ஐடியா 

திருவனந்தபுரம்: கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.

மே மாதம் 29-ஆம் தேதி துவங்கியதிலிருந்து தொடர்ந்து பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் இதுவரை 680 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.

இதுதொடர்பாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் தாமஸ் ஐசாக் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வெள்ள நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட 'சிறப்பு லாட்டரி' ஒன்றை விற்பனை செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அஷ்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த லாட்டரியானது ரூ. 250-க்கு விற்பனை செய்யப்பட்ட உள்ளது. எத்தனை வரிசைகள் அச்சிடப்பட்ட உள்ளனவோ, அத்தனைக்கும் ரூ 1 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 3-ஆம் தேதி குலுக்கல் நடைபெறவுள்ள இந்த லாட்டரிச் சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கக் கூடிய மொத்தத் தொகையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனைத்து செலவினங்களும் போக அரசுக்கு கிடைக்கக் கூடிய ரூ 100 கோடியே விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட உள்ளது என்று மாநில வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com