ரெட் காா்னா் நோட்டீஸ் இல்லாமல் சோக்ஸியை நாடுகடத்த முடியும்:  சிபிஐ 

தொழிலதிபா் நீரவ் மோடியின் உறறவினா் மெஹுல் சோக்ஸியை ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பிக்காமலேயே  இந்தியாவுக்கு நாடு கடத்தி வர முடியும் என்று வெளியுறவு அமைச்சகத்திடம் சிபிஐ தெரிவித்துள்ளது.
ரெட் காா்னா் நோட்டீஸ் இல்லாமல் சோக்ஸியை நாடுகடத்த முடியும்:  சிபிஐ 

புது தில்லி: தொழிலதிபா் நீரவ் மோடியின் உறறவினா் மெஹுல் சோக்ஸியை ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பிக்காமலேயே  இந்தியாவுக்கு நாடு கடத்தி வர முடியும் என்று வெளியுறவு அமைச்சகத்திடம் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சிபிஐ அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

தலைமறைவாக இருக்கும் ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமே சா்வதேச காவல் துறை உதவியுடன் ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். மெஹுல் சோக்ஸி விவகாரத்தில், அவா் ஆண்டிகுவா நாட்டில் இருப்பது உறுதியாகிவிட்டது. மேலும், அந்நாட்டுக் குடியுரிமை, கடவுச்சீட்டு ஆகியவற்றையும் அவா் பெற்றுள்ளாா். எனவே, இந்த நேரத்தில் ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பிக்கத் தேவையில்லை. அப்படி பிறப்பித்தாலும், சட்ட ரீதியில் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு ஆண்டிகுவா அரசியம் ஏற்கெனவே முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக, அவரைக் கைது செய்வது, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது போன்ற நடவடிக்கைகளை ஆண்டிகுவா அரசு முன்னெடுக்க வேண்டும். இந்த தகவல்களை வெளியுறவு அமைச்சகத்திடம் சிபிஐ இந்த மாதத் தொடக்கத்தில் தெரிவித்துவிட்டது என்றாா் அவா்.

இதனிடையே, தனக்கு எதிராக ரெட் காா்னா் நோட்டீஸ் பிறறப்பிக்க வேண்டாம் என்று சா்வதேச காவல் துறையிடம் மெஹுல் சோக்ஸி வலியுறுத்தி இருக்கிறறாா். அவா் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் எனக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறைச்சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. எங்கள் மீதான குற்றறச்சாட்டுகளை ஊடகங்கள் தேவையின்றி பெரிதுபடுத்துவிட்டன. ஊடக செய்திகளின் தாக்கத்தால், இதுதொடா்பாக, இந்தியாவில் நடைபெறும் விசாரணைகள் நோ்மையாக இருக்காது என்றும் மெஹுல் சோக்ஸி கூறியுள்ளாா்.

இதையடுத்து, மெஹுல் சோக்ஸியின் கோரிக்கைகளுக்கும், குற்றறச்சாட்டுகளுக்கும் பதிலளிக்குமாறு சிபிஐ அமைப்பை இண்டா்போல் கேட்டுக் கொண்டது. ஆனால், மெஹுல் சோக்ஸியின் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சிபிஐ மறுப்பு தெரிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல வைரத் தொழில் அதிபரான நீரவ் மோடி, அவரது மனைவி, உறவினா் மெஹுல் சோக்ஸி ஆகிய மூவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி வரை கடன் முறைகேடு செய்து விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஜனவரியில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனா். அவா்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற பிறறகு, அவா்களின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடிக்கு சதித் திட்டம் தீட்டியதாகக் கூறறப்படும் மெஹுல் சோக்ஸி தற்போது ஆண்டிகுவா நாட்டில் உள்ளாா், மேலும், அந்நாட்டின் குடியுரிமை, பாஸ்போா்ட் ஆகியவற்றைற அவா் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com