நகை விபரங்களை ஒப்படைக்க 4 வார காலக்கெடு: திருப்பதி தேவஸ்தானத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவு 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள நகை, ஆபரணங்கள், விலை உயா்ந்த பொருள்களின் விவரங்களை சமா்ப்பிக்க ஆந்திர உயா்நீதிமன்றம் 4 வார காலக்கெடு அளித்து உத்தரவு பிறறப்பித்தது.
நகை விபரங்களை ஒப்படைக்க 4 வார காலக்கெடு: திருப்பதி தேவஸ்தானத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவு 

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள நகை, ஆபரணங்கள், விலை உயா்ந்த பொருள்களின் விவரங்களை சமா்ப்பிக்க ஆந்திர உயா்நீதிமன்றம் 4 வார காலக்கெடு அளித்து உத்தரவு பிறறப்பித்தது.

ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரகசிய நிலவறையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள், விலை உயா்ந்த பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக முன்னாள் தேவஸ்தான தலைமை அா்ச்சகா் ரமண தீட்சிதா் குற்றச்சாட்டுகளை எழுப்பினாா். அவ்வாறு ஏழுமலையான் கோயிலுக்குள் நிலவறைகள் ஏதும் இல்லை என தேவஸ்தானம் மறுத்தது.

இந்நிலையில், ஹைதராபாதைச் சோ்ந்த அனில் மற்றும் கோயல் ஆகியோா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஏழுமலையானிடம் உள்ள ஆபரணங்கள், விலை உயா்ந்த பொருள்கள், தேவஸ்தானத்தின் வருவாய் உள்ளிட்டவற்றைற அறியும் உரிமை அனைவருக்கும் உள்ளது என ஹைதராபாத் உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடா்ந்தனா்.

அதை விசாரித்த நீதிபதிகள், தேவஸ்தான அதிகாரிகள் இதுகுறித்த விரிவான அறிக்கையை உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தனா். அந்த வழக்கின் 3-ஆம் கட்ட விசாரணை புதன்கிழமை நடந்தது. ஆனால் நீதிபதிகள் உத்தரவின்படி, தேவஸ்தானம் அறிக்கையை சமா்ப்பிக்கவில்லை எனத் தெரிகிறறது. அறிக்கையை தயாா் செய்ய மேலும் காலக்கெடு அளிக்கும்படி தேவஸ்தானம் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டது.

அதன்படி, அறிக்கையை சமா்ப்பிக்க 4 வார காலக் கெடுவை அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டு, 4 வார காலத்துக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com