வெளிநாடுகளுக்கு மட்டும் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் - மோடி அரசாங்கம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு 

இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்வதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 
வெளிநாடுகளுக்கு மட்டும் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் - மோடி அரசாங்கம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு 

இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்வதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 16-ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.59ஆக விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.73.84க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது,   

"பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் இந்திய மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேசமயம், வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசலை குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது மோடி அரசு. 

இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 78 முதல் 86 வரை விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.70 முதல் 75 வரை விற்பனையாகிறது. 

ஆனால், ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகலின்படி மோடி அரசாங்கம் 15 நாடுகளுக்கு பெட்ரோலையும், 29 நாடுகளுக்கு டீசலையும் விற்பனை செய்கிறது. அதில், பெட்ரோல் லிட்டருக்கு 34 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 37 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது. அதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளடங்கும். மத்திய அரசு இப்படி தான் இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறது.

பெட்ரோல், டீசல் மீது அரசு விதித்துள்ள கடுமையான வரிகளின் விளைவு தான் பெட்ரோல், டீசலின் இந்த ராக்கெட் வேக விலை உயர்வு. எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த கடுமையான வரியால் மோடி அரசாங்கம் ஏற்கனவே 11 லட்சம் கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது. 

2017 ஜீலையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருமாறு நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், பாஜக அரசு அதற்கு செவிசாய்க்கிவில்லை. 

மே 2014-இல், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 9.2, தற்போது கலால் வரி ரூ.19.48 ஆக உள்ளது. மே 2014-இல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3.46 ஆக இருந்தது. தற்போது ரூ.15.33 ஆக கலால் வரி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கலால் வரி 12 முறை அதிகரித்துள்ளது.  

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இந்திய மக்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். வர இருக்கும் தேர்தலில் மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com