செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாதா?: நிதி அமைச்சகம் விளக்கம் 

செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாதா?: நிதி அமைச்சகம் விளக்கம் 

புது தில்லி: செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்றும், இதனால் ஏடிஎம் உள்ளிட்ட வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவியது. அதாவது செப்டம்பர் 2 முதல் 5 வரையிலும் பின்னர் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று வாட்ஸ்-அப்பில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் 3 திங்கள் அன்று ஜன்மாஷ்டமி விடுமுறை. இருப்பினும் தில்லி மும்பையில் உள்ள வங்கிகள் திறந்திருக்கும். செப்டம்பர் 4-5 ஆகிய நாட்களில் பி.எஃப் மற்றும் ஓய்வூதிய பிரச்சனையை முன்வைத்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கிகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது.

மேலும் செப்டம்பர் 8 இரண்டாவது சனிக்கிழமை என்பதால், அது வழக்கமான விடுமுறை ஆகிறது. அந்த நாட்களில் கூட அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது.

அத்துடன் ஏடிஎம்களில் இருந்து மக்களுக்கு வழங்குவதற்கு போதுமான பணத்தை நிரப்புமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. எனவே இதர நாட்களில் வங்கிகள் செயல்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com