உலகின் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் தமிழக நகரங்கள் எவை தெரியுமா? 

வேகமாக வளர்ந்து வரும் உலகின் முதன்மையான 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகிய நகரங்கள் இடம்பெற்று சாதனை
உலகின் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் தமிழக நகரங்கள் எவை தெரியுமா? 

வேகமாக வளர்ந்து வரும் உலகின் முதன்மையான 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகிய நகரங்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளன. 

உலகம் முழுக்க தற்போது நகரங்களில் உருவாகும் புதிய நிறுவனங்கள், வேலை வாய்ப்பு, மக்கள் தொகை, பணிசூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

இதில், முதல் முதன்மையான பத்து இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்கள் தான் உள்ளது. உலக அளவில் பெரிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளி திருப்பூர் நகரம் சாதனை படைத்து இருக்கிறது.

எதிர்கால ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) அடிப்படையில் 2019 முதல் 2035 வரை உலகின் சில நகரங்களில் வளர்ச்சி மிக வேகமாக நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் உலகின் 20 நகரங்களின் பட்டியலில் 17 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

2019 - 2023 ம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் முதல் முதன்மையான 10 நகரகங்களின் பட்டியலில் குஜராத்தின் சூரத் நகரம் முதல் இடத்திலும், ஆக்ரா 2வது இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் பெங்களூரு, 4வது இடத்தில் ஹைதராபாத், 5வது இடத்தில் நாக்பூர், 6வது இடத்தில் திருப்பூர், 7 வது இடத்தில் ராஜ்கோட், 8 வது இடத்தில் திருச்சி, 9 வது இடத்தில் சென்னை, 10 வது இடத்தில் விஜயவாடா உள்ளது.

திருப்பூர் சாதனை: இந்த பட்டியலில் நூல் உற்பத்தியும், பின்னலாடை உற்பத்தியும் நடைபெற்று வரும் திருப்பூர் நகரம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. வளர்ச்சி விகிதத்தில் 8.36 சதவிகிதம் பெற்ற திருப்பூர் உலகிலேயே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தை பிடித்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு முன்னாள் சென்று சாதனை படைத்துள்ளது. சென்னை 8.17 சதவிகித வளர்ச்சியை பெற்று 9வது இடத்தில் உள்ளது. சென்னையைவிட திருப்பூர் 0.19 சதவிகிதம் அதிகம் பெற்று உள்ளது. அதேபோல் திருச்சி 8.29 சதவிகித வளர்ச்சி பெற்று 8வது இடத்தை பிடித்து பெரிய சாதனை படைத்துள்ளது. திருச்சியும் சென்னையை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

உலகின் பெரிய நகரங்ளான நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், பெய்ஜிங், லண்டன், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களை 10 இடங்களுக்கு பின்னால் தள்ளி திருப்பூர் அதிக வளர்ச்சியை பெற்று இருக்கிறது. அதேபோல் திருச்சியும், சென்னையும் கூட, இதில் கவனிக்க தகுந்த இடத்தை அடைந்துள்ளது. உலகில் உள்ள சில முக்கிய நகரங்கள் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் 2030ல் இந்தியா பெரிய வளர்ச்சியை சந்தித்து இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com