அரசுடன் இணைந்து பணியாற்ற முடியாததால் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்துள்ளார்: ராகுல்

ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பாதுகாத்து வந்த காரணத்தால் தான் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய நேர்ந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். 
அரசுடன் இணைந்து பணியாற்ற முடியாததால் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்துள்ளார்: ராகுல்

ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பாதுகாத்து வந்த காரணத்தால் தான் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய நேர்ந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

எதிர்கட்சிகளின் கூட்டத்தின் மத்தியில் தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜிநாமா செய்தது தெரியவந்தது. ஏனெனில் இனியும் அவரால் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பாதுகாத்து வந்த காரணத்தால் தான் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய நேர்ந்தது. மத்திய அரசு தனது சொந்த தேவைகளுக்காக ரிசர்வ் வங்கியை தன்வசப்படுத்த நினைப்பது தேச விரோத நடவடிக்கை ஆகும். தற்போது மத்திய அரசின் இந்த சர்வாதிகார முறைக்கு பலர் இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்து வருவது எனக்கு பெருமையாக உள்ளது.

இந்தியாவின் தன்னாட்சி அமைப்புகளான ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை தற்போதைய பாஜக ஆட்சியால் சீரழிந்து வருகின்றன. எனவே அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com