உர்ஜித் படேல் முடிவை மத்திய அரசு மதிக்கிறது: அருண் ஜேட்லி

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மற்றும் ஆளுநராக உர்ஜித் படேல் திறம்பட செயல்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். 
உர்ஜித் படேல் முடிவை மத்திய அரசு மதிக்கிறது: அருண் ஜேட்லி

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜிநாமா செய்தது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், 

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மற்றும் ஆளுநராக உர்ஜித் படேல் திறம்பட செயல்பட்டுள்ளார். அவரின் இந்த உணர்வுப்பூர்வமான முடிவை மத்திய அரசு மதிக்கிறது. உர்ஜித் படேலுக்கு சிறந்த எதிர்காலம் அமையவும், பொதுச் சேவையில் மேலும் ஈடுபடவும் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அதுபோன்று, விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக கூறியதாவது, 

இந்தியாவுக்கு இது மிகச்சிறப்பான நாள். இந்தியாவில் ஊழல் செய்துவிட்டு யாராலும் தப்பிக்க முடியாது. பிரிட்டன் நீதிமன்றத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது ஊழல் செய்து தப்பித்த ஒருவர் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பிடிக்கப்படுகிறார்.

இது நேர்மைக்கும், தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி. இந்திய மக்கள், பொருளாதாரம் ஆகியவற்றை ஏமாற்றிவிட்டு இவ்வுலகில் எங்கு வேண்டுமென்றாலும் சுதந்திரமாக இருந்துகொண்டு இந்திய அரசால் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com