மிஸோரமில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்? முதல்வர் லால் தன்ஹாவ்லா தோல்வி முகம்

மிஸோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மிஸோரமில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்? முதல்வர் லால் தன்ஹாவ்லா தோல்வி முகம்

மிஸோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணிக் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது மிஸோ தேசிய முன்னணிக் கட்சி 27 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 8 தொகுதகளிலும், பாஜக 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட மிஸோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மிஸோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான செர்சிப்- தொகுதியில் அதிகபட்சமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் மிஸோரம் மட்டுமே. இங்குள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

மிஸோரமில் முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வாக்கு கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com