ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகள் மீதான தாக்குதல் தடுக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், 
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், 


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குவதையொட்டி, தில்லியில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை ஒருங்கிணைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்த இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவெ கெளடா, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தவிர, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, லோக்தந்திரிக் ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாயாவதி, அகிலேஷ் பங்கேற்கவில்லை: எனினும், மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசியதாவது:
இதுவரை இல்லாத அளவில், சிபிஐ முதல் ஆர்பிஐ வரை பல்வேறு சுதந்திரமான அமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன. இதுவும் மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயமாகும். இதற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும்.
மத்திய பாஜக அரசு, சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறது. இந்த அரசுக்கு எதிரான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும். நாட்டின் நிதி நிலைமை ஸ்திரத்தன்மையுடன் இல்லை; நிதி நெருக்கடி நிலை தொடங்கி விட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து உர்ஜித் படேலின் ராஜிநாமா குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றார் அவர்.
அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகளின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதிலும், அந்த அமைப்புகளை பாதுகாப்பதிலும், பாஜகவை தோற்கடிப்பதிலும் இணைந்து செயல்படுவதற்கு எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com