இது மக்களின் வெற்றி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இது மக்களின் வெற்றி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணித்தார். இதுதொடர்பாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியதாவது:

சாதி, மத, இன பேதங்களைக் கடந்து விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய அனைவரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறன். தெலங்கானா மாநில வளர்ச்சித் திட்டங்கள் தொடரும். 

இந்த மிகப்பெரிய வெற்றியானது நமக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பு என்பதை கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும், அராஜக செயல்களில் ஈடுபடக்கூடாது. இது மக்களின் வெற்றி என்று குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com