எட்டில் ஆரம்பித்து எட்டில் முடியும் மிஸோரம் அரசின் ஆயுள்: வரலாறு அப்படி!

எட்டில் ஆரம்பித்து எட்டில் முடியும் மிஸோரம் அரசின் ஆயுள்: வரலாறு அப்படி!

மிஸோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. 

மிஸோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. 

மிஸோரமில் தற்போதைய நிலவரப்படி மிஸோரம் தேசிய முன்னணி 26 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

மிஸோரம் மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்த லால் தன்ஹாவ்லா, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளார்.

மிஸோரம் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான மிஸோரம் தேசிய முன்னணி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்தது எப்படி? காரணம், அதன் அரசியல் வரலாறு அப்படி என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

அதாவது, மிஸோரம் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதாவது, இன்று ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கும் காங்கிரஸ் கட்சி கடந்த 2008ம் ஆண்டு மிசோரமை ஆளத் தொடங்கியது. 2013ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்ந்தது.

அதே சமயம், கடந்த 1998ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை மிஸோரமை ஆண்ட மிஸோரம் தேசிய முன்னணி தற்போது அதாவது 2018ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்த வகையில், மிஸோரமில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுவதுதான் அம்மாநில தேர்தல் வரலாறு.. அதாவது ஹிஸ்ட்ரி என்பதால், இந்த முறை ஆட்சியைப் பிடிப்போம் என்று மிஸோரம் தேசிய முன்னணி உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com