சச்சின் பைலட்டை ராஜஸ்தானின் 14-ஆவது முதல்வராக்கிய விக்கிபீடியா!

சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநிலத்தின் 14-ஆவது முதல்வர் என விக்கிபீடியாவில் பதிவேற்றியதால் சலசலப்பு ஏற்பட்டது.
சச்சின் பைலட்டை ராஜஸ்தானின் 14-ஆவது முதல்வராக்கிய விக்கிபீடியா!

சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநிலத்தின் 14-ஆவது முதல்வர் என விக்கிபீடியாவில் பதிவேற்றியதால் சலசலப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை எட்டியுள்ளது. அதுபோன்று ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இருப்பினும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ராஜஸ்தானின் 14-ஆவது முதல்வர் என விக்கிபீடியா பக்கத்தில் பதிவேற்றப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது. ராஜஸ்தானில் மூத்த தலைவர் அசோக் கேலாட் மற்றும் இளைய தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் பனிப்போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com