விவசாயிகளை சுமையாக கருதுகிறது மோடி அரசு: ராகுல் காந்தி தாக்கு

நாட்டில் உள்ள விவசாயிகளை மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சுமையாக கருதுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
விழாவில், நினைவு பதிப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா உள்ளிட்டோர்.
விழாவில், நினைவு பதிப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா உள்ளிட்டோர்.


நாட்டில் உள்ள விவசாயிகளை மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சுமையாக கருதுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம், மொகாலியில் திங்கள்கிழமை நடைபெற்ற அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஹிந்தி பத்திரிகை நவஜீவன் பத்திரிகையை மீண்டும் தொடங்கி வைக்கும் விழாவில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவர் பேசியதாவது:
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை ஆகியவை மிகப்பெரிய பிரச்னைகளாக திகழ்கின்றன. இதனால் நாட்டில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியாததும் ஒரு காரணம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி முன்பு இருக்கும் மிகப்பெரிய சவாலும் இதுதான்.
பஞ்சாப் மண்ணில் இருந்து கொண்டு, இதை நான் தெரிவிக்கிறேன். 21ஆவது நூற்றாண்டோ அல்லது 22ஆவது நூற்றாண்டோ சரி, விவசாயிகள் இல்லாமல் நாடால் இயங்க முடியாது. உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் எதிர்காலம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில், நாடே முடங்கிவிடும்.
வேலைவாய்ப்புகள், விவசாயிகள் பிரச்னைகளை பொறுத்தவரையில், மாநிலங்களிலும், தேசிய அளவிலும் காங்கிரஸ் அரசு அமையும்பட்சத்தில், 21ஆவது நூற்றாண்டுக்கு ஏற்ப புதிய கண்ணோட்டத்தில் நாங்கள் செயல்படுவோம். மத்தியில் ஆளும் மோடி அரசால், ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசு பணியாற்ற விடுவதில்லை. ராணுவத்தை தனது சொந்த சொத்து போல பிரதமர் மோடி பயன்படுத்தியதாகவும், தனது அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியதாகவும் ராணுவ மேஜர் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். தேர்தல் ஆணையமும் மத்திய அரசால் நிர்பந்திக்கப்படுகிறது. பத்திரிகைகளும், ஊடகங்களும் அச்சுறுத்தல் மற்றும் நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. 
பத்திரிகை என்பது புலி போன்றது. சக்திவாய்ந்தவர்களின் இடத்தை பத்திரிகையே வெளிக்காட்டும். அப்படியிருக்கையில் பத்திரிகை உரிமையாளர்களுக்கு மத்திய அரசு நிர்பந்தம் அளித்தால், அந்த புலியானது, காகித புலியாகிவிடும். அதற்கு வலிமை இல்லாமல் போய்விடும். ஊடகத்தை அவமதிப்பதற்காக இவ்வாறு நான் கூறவில்லை. இன்றைய பத்திரிகை செய்திகளை பார்த்தாலே இதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
சீனாவில் அந்நாட்டு அரசானது, 24 மணி நேரத்தில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியாவிலோ 450 வேலைவாய்ப்புகள்தான் உருவாக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும். இதேபோல், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கும். 5 மாநில தேர்தல்களில் மக்கள் தெளிவான முடிவை கொடுப்பார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.
நிகழ்ச்சியில் நவஜீவன் பத்திரிகையின் நினைவு பதிப்பும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பஞ்சாப் மாநிலம், மொகாலியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஹிந்தி நாளிதழ் நவஜீவன் தொடக்க
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com