100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தல்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 100 குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களை அமெரிக்காவுக்கு மீட்டு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் உரிய


அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 100 குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களை அமெரிக்காவுக்கு மீட்டு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார். 
வெளிநாட்டு விவகாரங்கள் துணைக்குழு சார்பில் சர்வதேச குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், குழந்தை கடத்தல் தடுப்பு தொடர்பான ஆலோசனைகளையும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினர். 
கூட்டத்தில் கிறிஸ் ஸ்மித் பேசியதாவது: அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 100 குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகள் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டு வருவது சாத்தியமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்படும் வரை இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அப்போது தான், கடத்தப்பட்ட அமெரிக்க குழந்தைகள் நாடு திரும்ப வாய்ப்பு ஏற்படும். எனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டு கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஹேக் உடன்படிக்கை, இருதரப்பு உடன்படிக்கை போன்றவற்றில் கூறப்பட்டுள்ள செயல்திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் அமெரிக்க குழந்தைகள் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகிறேன் என்று பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com