மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே நூலிழையில் ஊசலாடிய வாக்கு சதவீத வித்தியாசம் 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல, வாக்கு சதவீத வித்தியாசமும் நூலிழையில் ஊசலாடிய தகவல் வெளியாகியுள்ளது. 
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே நூலிழையில் ஊசலாடிய வாக்கு சதவீத வித்தியாசம் 

புது தில்லி: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல, வாக்கு சதவீத வித்தியாசமும் நூலிழையில் ஊசலாடிய தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த  7-ஆம் தேதி நடைபெற்ற மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகின. மொத்தமுள்ள 230 இடங்களில் ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் 229 இடங்களில் மட்டுமே தேர்தல் நடந்தது. 

வெளியான முடிவுகளில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

அருதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 116 இடங்களை இருவரும் பெறாத நிலையில்  பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சில சுயேச்சைகளின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் - பாஜக இடையே வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல, வாக்கு சதவீத வித்தியாசமும் நூலிழையில் ஊசலாடிய தகவல் வெளியாகியுள்ளது.  

114 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 40.9%. அதே நேரம் 109 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜ கட்சியின் வாக்கு சதவீதம் 41% ஆகும். 

இதன் மூலம் பாஜகவை விட காங்கிரஸ் 5 இடங்கள் கூடுதலாக பெற்றிருந்தாலும், அதன் வாக்கு சதவீதம் பாஜகவை விட 0.10% மட்டுமே அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.    

அதேநேரம் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளும், பாஜக 44.88 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com