ராஜஸ்தான் முதல்வர் தேர்வு காங்கிரஸ் தலைவரின் முடிவு: சச்சின் பைலட்

ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வது காங்கரிஸ் தலைவர் ராகுலின் முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார். 
ராஜஸ்தான் முதல்வர் தேர்வு காங்கிரஸ் தலைவரின் முடிவு: சச்சின் பைலட்

ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வது காங்கரிஸ் தலைவர் ராகுலின் முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:

ராஜஸ்தான் முதல்வர் தேர்வு தொடர்பாக தங்களது கருத்துக்களை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதுகுறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும். இருப்பினும் ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வது காங்கிரஸ் தலைவர் ராகுலின் முடிவாக இருக்கும் என்றார்.  

முன்னதாக, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற செவ்வாய்கிழமை அவர் கூறியதாவது:

ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்ட அனைவரும் ஒரு அணியில் திரள வேண்டும். மத்தியில் மட்டுமல்லாது மாநிலங்களின் அளவிலும் இதுகுறித்து அனைவரிடமும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. அப்போதுதான் பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்ற அனைவரது நோக்கம் நிறைவேறும். 

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைப்பதை விட மக்களின் அரசை அமைக்கவே நாங்கள் விரும்புகிறோம். இது அடுத்து வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com