தேர்தல் பரபரப்பை கண்டுகொள்ளாத மோடி: வழக்கமான பணியில் ஈடுபட்டார்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்ததால், நாடே செவ்வாய்க்கிழமை பரபரப்பில் இருந்த நிலையில், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்
தேர்தல் பரபரப்பை கண்டுகொள்ளாத மோடி: வழக்கமான பணியில் ஈடுபட்டார்


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்ததால், நாடே செவ்வாய்க்கிழமை பரபரப்பில் இருந்த நிலையில், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரதமர் நரேந்திர மோடி தனது வழக்கமான பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, பிற நாள்களை போல அன்றும் பிரதமர் மோடி வழக்கமான பணியில் ஈடுபட்டார். நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வந்தார். பின்னர் ஊடகத்தை சேர்ந்த நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். மக்களவையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டதும், உத்தரப் பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் முக்கிய துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார்.
செவ்வாய்க்கிழமை மாலை, தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது தொடர்பான செய்திகள் வெளியாகின. இருப்பினும், தில்லியில் புதன்கிழமை காலை நடைபெறும் மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சியில் பேச வேண்டிய உரைக்கு பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மாலை இறுதி வடிவம் கொடுத்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளான, புதன்கிழமை அதிகாலையில் வெகுசீக்கிரம் எழுந்த மோடி, விக்யான் பவனில் காலை 9 மணிக்கு நடைபெற்ற மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து, அங்கிருந்து நாடாளுமன்ற அலுவலில் கலந்து கொள்ள சென்றார்.
அங்கு அவர் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பாக பாஜக மூத்த எம்.பிக்களுடன் பேசிய மோடி, இதன்பின்னர் மகாராஷ்டிர மாநிலம் புணே, கல்யாண் ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். 
இதனைத் தொடர்ந்து, கேரளம் மற்றும் தமிழகத்தில் வரும் 14,15ஆம் தேதியன்று பாஜக தொண்டர்களுடன் காணொலி மூலம் பேச வேண்டிய திட்டத்தை பிரதமர் மோடி இறுதி செய்தார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com