பாஜக-வின் எதிர்மறை அரசியலுக்கு எதிரான வெற்றி: சோனியா காந்தி

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பாக அக்கட்சியின்
பாஜக-வின் எதிர்மறை அரசியலுக்கு எதிரான வெற்றி: சோனியா காந்தி


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக-வின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில், 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதுகுறித்து புதன்கிழமை கருத்து தெரிவித்த சோனியா காந்தி, பேரவைத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. இது, பாஜக-வின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக, காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி என்றார்.
ராகுல் பிரதமர் ஆவார்: இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் வெற்றி பெற்றுவிட்டதாகவும்; அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு பின் அவர் பிரதமராக பதவியேற்பார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தவறான நிர்வாகத்தை, மக்கள் நீண்ட காலமாக பொறுத்துக் கொண்டு இருந்தனர். இப்போது, தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாஜகவின் ஆட்சியில் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மக்கள் உணர்த்திவிட்டனர். சோனியா, ராகுலுக்கு எதிராக தனிப்பட்ட விரோதத்துடன் பாஜக முன்னெடுத்த பிரசாரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது, காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல; அதன் தலைமைக்கும் கிடைத்த வெற்றி.
தலைமைத்துவம் தொடர்பான அனைத்து தேர்வுகளிலும் ராகுல் வெற்றி பெற்றுவிட்டார். அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு பின், அவர் பிரதமராக பொறுப்பேற்பார். அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகியவற்றால், கட்சிக்கு மேலும் வெற்றிகள் கிடைக்கும். மோடியை விட சிறந்த தலைவராக ராகுலை மக்கள் பார்க்க தொடங்கியுள்ளனர். மோடிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் அவர் ஒருங்கிணைப்பார் என்றார் மொய்லி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com