தேர்தலில் வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: கமல்நாத் உறுதி

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வராக தேர்வு
தேர்தலில் வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: கமல்நாத் உறுதி

போபால்: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, கமல்நாத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சி தலைவராக கமல்நாத் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 72 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மத்திய அமைச்சராக பலமுறை பதவி வகித்துள்ளார். இப்போது முதல்முறையாக மத்தியப் பிரதேச முதல்வராக வரும் 17 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா, போபாலில் உள்ள லால் பாரடே கிரவுண்டில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென்பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில், முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தேர்சல் பிரசாரத்தின் தலைவர் ராகுல்காந்தி மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைத்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளூபடி செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்படி எனது தலைமையிலான ஆட்சி பதிவியேற்றவுடன் முதல் பணியாக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்படும் என தெரிவித்தார் கமல்நாத். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com