மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கக் காரணம் இதுதானாம்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதன் காரணத்தை, தேர்தல் தலைமை அதிகாரி விஎல் கந்தா ராவ் விளக்கியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கக் காரணம் இதுதானாம்


புது தில்லி: மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதன் காரணத்தை, தேர்தல் தலைமை அதிகாரி விஎல் கந்தா ராவ் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடிதத்தில், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய 8.30 மணி முதலே, அனைத்து வேட்பாளர்களும் மின்னணு வாக்கு இயந்திரத்தின் சீல், டேக், சீரியல் எண், என அனைத்தையும் ஒவ்வொருவரும் ஆய்வு செய்தனர்.

சில முறை, சீல், சீரியல் எண், டேக் எண், பூத் ஊழியரின் கையெழுத்த போன்றவற்றில் வேட்பாளர்கள் சந்தேகங்களை எழுப்பினர். ஒவ்வொரு முறையும் அது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மின்னணு இயந்திரத்தையும் வாக்கு எண்ணிக்கைக்கு எடுக்கும் போது இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கையை ஒவ்வொரு முறையும் பதிவு செய்து அதனை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளோம். இதுபோன்ற நடைமுறைகளால்தான் தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com