நிதி மோசடியாளர்களுக்கு எதிராக 2,500 வழக்குகள்: ஜேட்லி தகவல்

பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்களுக்கு எதிராக, நிகழாண்டில் மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் மத்திய
நிதி மோசடியாளர்களுக்கு எதிராக 2,500 வழக்குகள்: ஜேட்லி தகவல்

பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்களுக்கு எதிராக, நிகழாண்டில் மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
பொதுத் துறை வங்கிகள் அளித்த தகவல்களின்படி,  நிகழாண்டில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக 2,571 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், நிதி மோசடியாளர்களிடம் இருந்து கடன்தொகையை வசூலிப்பதற்காக, 9,363 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நிதி மோசடியாளர்கள் உருவாவதை தடுக்கவும், அவர்களிடம் இருந்து கடனைத் திருப்பி வசூலிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மேற்கொண்டு வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படி,  கடன் மோசடியாளர்களுக்கு எந்த வங்கியும், நிதி நிறுவனமும் கூடுதலாகக் கடனுதவி அளிப்பதில்லை. அந்த மோசடியாளர்கள் புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. 
நிதி மோசடியாளர்களுக்கு எதிராகக் கடன் கொடுத்த வங்கிகள் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்ய முடியும். இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 45-இ பிரிவின்படி, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாத கடன் மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வங்கிகள் வெளியிட முடியாது என்று ஜேட்லி பதிலளித்தார்.
பன்னாட்டு நிறுவனங்கள், தனி நபர் என 568 பேர், வங்கிகளில் கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாத தொகை ரூ.6.29 லட்சம் கோடியாகும். அவற்றில், 95 பேர் மட்டும் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளனர். என்று மற்றொரு கேள்விக்கு ஜேட்லி பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com