சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் தேர்வு 

காங்கிரஸ் வெற்றி பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் தேர்வு செய்ப்பட்டுள்ளார். 
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் தேர்வு 

ராய்பூர்: காங்கிரஸ் வெற்றி பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் தேர்வு செய்ப்பட்டுள்ளார். 

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வென்றது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜகவால் 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

ஆனால் சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு யாரையும் முன்னிறுத்தி காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், முதல்வர் குறித்து இன்னமும் அக்கட்சியால் முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பூபேஷ் பாகேல், டி.எஸ். சிங் தேவ், தம்ராத்வாஜ் சாகு, சரண் தாஸ் மகந்த் ஆகிய 4 பேர் இடையே முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வந்தது. 
தில்லியில் இவர்கள் 4 பேருடனும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். 

அப்போது முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் சத்தீஸ்கரில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் ஞாயிற்றுக் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சத்தீஸ்கர் எம்எல்ஏக்களில் ஒருதரப்பினர் டி.எஸ். சிங் தேவுக்கும், மற்றோர் தரப்பினர் பாகேலுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டி.எஸ். சிங் தேவுக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் விரைவில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தெரிகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com