ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.88,911 கோடி பட்ஜெட்: ஆளுநர் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான ரூ.88,911 கோடி பட்ஜெட்டுக்கு  ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான ரூ.88,911 கோடி பட்ஜெட்டுக்கு  ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக் தலைமையில் மாநில நிர்வாக கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகள், 2018-19ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை முதன்மை செயலர் (நிதி) நவீன் கே. சௌதரி தாக்கல் செய்தார். ரூ.30,469 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதியாக ரூ.3,631 கோடி ஒதுக்கப்பட்டது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதுபோல், பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. இதையடுத்து பட்ஜெட்டுக்கு ஆளுநர் தலைமையிலான மாநில நிர்வாக கவுன்சில் தனது ஒப்புதலை வழங்கியது.
லடாக்கில் பல்கலைக்கழகம்: இதேபோல், லடாக் பிராந்தியத்தில் முதல் பல்கலைக்கழகம் அமைக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. லே மற்றும் கார்கில் மாவட்டங்களில் உள்ள 5 கல்லூரிகள், இந்த பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com