நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை சீர்குலைக்கிறது காங்கிரஸ்: பிரகாஷ் ஜாவடேகர் 

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை சீர்குலைக்கிறது காங்கிரஸ்: பிரகாஷ் ஜாவடேகர் 

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து கோவா மாநிலம், பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்றும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியதில்லை என்றும் தீர்ப்பு வழங்கியிருப்பதன் மூலமாக காங்கிரஸ் கட்சியின்  பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக நாம் புரிந்து கொள்ள முடிகின்ற ஒரே விஷயம் என்னவெனில், ரஃபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்த விரும்புகின்றனர். இது நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமையும். இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ரஃபேல் ஒப்பந்தத்தை 7 ஆண்டுகளாக தாமதப்படுத்தியது.ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னால், டஸால்ட் நிறுவனத்தை அணுகாமல், நேரடியாக இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தமாக மேற்கொள்ளப்பட்டது.  ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பொய்யான தகவல்களை கூறியதற்காக நாட்டு மக்களிடமும், பாதுகாப்பு படைகளிடமும், நாடாளுமன்றத்திலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ஜாவடேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com