ராமர் கோவில் கட்டியே தீருவோம்: உத்தரப்பிரதேச டிஜிபி எடுத்த  உறுதிமொழியால் சர்ச்சை! 

ராமர் கோவில் கட்டியே தீருவோம்: உத்தரப்பிரதேச டிஜிபி எடுத்த  உறுதிமொழியால் சர்ச்சை! 

ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று நிகழ்ச்சி ஒன்றில் உத்தரப்பிரதேச மாநில ஊர்க்காவல் துறை டிஜிபி எடுத்த உறுதிமொழியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

லக்னௌ: ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று நிகழ்ச்சி ஒன்றில் உத்தரப்பிரதேச மாநில ஊர்க்காவல் துறை டிஜிபி எடுத்த உறுதிமொழியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில ஊர்க்காவல் துறை டிஜிபியாக இருப்பவர் சூர்ய குமார் சுக்லா. இரண்டு நாட்களுக்கு முன்பாக லக்னௌ பல்கலைக்கழகத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சுக்லா கலந்து கொண்டார்.

அப்பொழுது சுக்லா அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் முன்னிலையில், "ராம பக்தர்களாகியாய் நாம், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராமர் கோவிலை விரைவாக கட்டி முடிப்போம் என்று உறுதியேற்போம்" என்று கூறும் விடியோவானது தற்பொழுது இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அவருடன் இன்னும் நிறைய பேர் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் பொழுது, பின்னணியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்னும் குரல்கள் ஒலிக்கிறது 

இது தொடர்பாக சுக்லாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட பொழுது அவர் கூறியதாவது:

அந்த கூட்டமானது அயோத்தியில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்து அங்கு ராமர் கோவிலும், அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் மசூதி ஒன்றும் கட்டுவது தொடர்பான சூழ்நிலையை உருவாக்கும் கூட்டமாகும். ராமர் கோவில் கட்டுவதை விட, அதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே முக்கியமாக பேசப்பட்டது. அதற்கான சூழலை உருவாக்குவது தொடர்பாகவே நான் உறுதிமொழி ஏற்றேன். ஆனால் அந்த விடியோவானது எடிட் செய்யப்பட்டு தவறான தொனியில் கருத்து பரப்பப்படுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com