தமிழகத்தில் எந்த எரிவாயு திட்டமும் நடைபெறவில்லை: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்

தமிழகத்தில் மீத்தேன் அல்லது ஷெல் காஸ் உட்பட எந்த திட்டமும் நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் எந்த எரிவாயு திட்டமும் நடைபெறவில்லை: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்

இரு நாட்கள் பொது விடுமுறைக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டம் திங்கள்கிழமை மீண்டும் கூடியது. அப்போது எரிவாயு மீதான விவாதம் நடைபெற்றபோது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். 

அதில், தமிழகத்தில் மீத்தேன் அல்லது ஷெல் காஸ் உள்ளிட்ட எந்த திட்டமும் நடைபெறவில்லை. கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் எந்த புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் மீத்தேன், ஷெல் காஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதியை பெற்ற பிறகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை தொடங்க முடியும்.

அதுபோல கதிராமங்கலத்தில் ஓன்ஜிசி சார்பில் எந்த புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அமைப்பை ஏற்படுத்த சாத்தியமுள்ள புவியியல் இடங்களாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com