ஒரு நாள் சிறை வாழ்வு திட்டம்: தெலங்கானா அரசு அறிமுகம்

குற்றங்கள் குறைய ஒரு நாள் சிறை வாழ்வு என்ற புதிய திட்டத்தை தெலங்கானா அரசு அறிமுகம் செய்துள்ளது. 

குற்றங்கள் குறைய ஒரு நாள் சிறை வாழ்வு என்ற புதிய திட்டத்தை தெலங்கானா அரசு அறிமுகம் செய்துள்ளது. 
தெலங்கானா மாநில சிறைத் துறை, சிறை வாழ்வின் இன்னல்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், "பீல் தி ஜெயில்' என்ற பெயரில், ஒரு நாள் சிறை வாழ்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறை வாழ்வின் இன்னல்களை அறிந்து கொண்டால் மற்றவர்கள் தவறு செய்ய தயங்குவர். இதனால் மாநிலத்தில் நடைபெறும் குற்றங்கள் குறையும் என அதிகாரிகள் கருதி, இதுபோன்று ஒரு வாய்ப்பை சாதாரண மக்கள் முதல் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கி வருகின்றனர். 
அதன்படி, ஒரு நாள் சிறை வாழ்வை வாழ விரும்பும் பலர் இதில் பங்கு கொண்டு, ஒரு நாள் சிறை வாழ்வை விருந்தினராக சென்று அனுபவித்து வருகின்றனர். 
இந்நிலையில் இதுகுறித்து அறிந்த செம்மனூர் குழுமத்தின் தலைவர் பாபி செம்மனூர் தன் நண்பர்களுடன் கடந்த திங்கள்கிழமை விருந்தினர் கைதியாக தெலங்கானாவில் உள்ள சங்காரெட்டி சிறையில் இருந்தார்.
சிறைக்கு வந்த அவருக்கு சிறை அதிகாரிகள் சிறையில் நடந்து கொள்ளும் முறைகளை விவரித்து, அவர்களுக்கு கைதி உடையை வழங்கினர். தெலங்கானா வரலாற்றிலேயே முதல் முறையாக தொழிலதிபர் ஒருவர் ஒருநாள் விருந்தினர் கைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com